Aug 07

மீண்டும் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!


அடுத்து வரும் நாட்களில் தொடர் பேருந்து பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு 12 முதல் பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

பேருந்து சேவையில் உள்ள பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 10ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் திருத்தத்தில் ஒரு லீற்றர் டீசலின் விலை, 10 ரூபாவினால் அதிகரித்தால் பேருந்து கட்டணம் உடனடியாக அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த மாதம் பஸ் கட்டணங்களில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசியின் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பேருந்து கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.