Aug 06

யுத்த வடுக்களை சுமக்கும் மக்களின் வாழ்வாதார நிலை!

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியூதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமது சொந்த பணத்தில் கட்டப்பட்ட மக்களின் குடியிருப்புக்கள் அழிக்கப்பட்ட வரலாறுகள் வடக்கு, கிழக்கில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் “2017 ' வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார், நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள "லூர்து நகர்" வீடமைப்புத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் யுத்ததின் வடுக்களில் வாழும் மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.