Aug 06

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாண இளைஞன் கைது !

ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட யாழ்ப்பாண இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பெல்ஜியத்துக்கு செல்ல முற்பட்ட வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே நேற்று அதிகாலை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.கடந்த 2ம் திகதி இலங்கையிலிருந்து, சிங்கபூருக்கு சென்ற இளைஞன், நேற்று மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளார்.நேற்று அதிகாலைவேளையில் நாட்டுக்குத் திரும்பிய அவர், பெல்ஜியம் நோக்கி பயணிப்பதற்கான, கடவுச்சீட்டை கையளித்துள்ளார். அதனை சோதனைக்கு உட்படுத்திய போது, அந்த கடவுச்சீட்டு மலேசியா கடவுச்சீட்டென்றும், அது போலியானது எனவும், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டார்.தான் பயணித்த விமானத்தில் வைத்தே, பெல்ஜியத்திற்கான கடவுச்சீட்டு தன்னிடம் வழங்கப்பட்டதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.