Jun 03

இந்தியாவில் பட்ஜெட் விலையில் மோட்டோ சி ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலாவின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. மோட்டோ சி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக இரண்டு மாடல்களில் சர்வதேச சந்தைகளில் வெளியிடப்பட்டது. மோட்டோ சி 1 ஜிபி ரேம் மற்றும் மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருந்தது. 

எனினும் இந்தியாவில் 1 ஜிபி ரேம் கொண்ட மோட்டோ சி ஸ்மார்ட்போன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ சி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 4ஜி வோல்ட்இ உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.மோட்டோ சி சிறப்பம்சங்கள்:

* 5.0 இன்ச் FWVGA 854x480 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே

* 1.1 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6737M குவாட்கோர் சிப்செட் 

* 1 ஜிபி ரேம் 

* 8 ஜிபி, 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 2 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் 

* 2350 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.5,999 விலையில் அனைத்து ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் கிடைக்கும். முன்னதாக சியோமி நிறுவனம் வெளியிட்ட ரெட்மி 4A ஸ்மார்ட்போனிற்கு மோட்டோ சி போட்டியாக இருக்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.