Aug 06

ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விமானம் விபத்து: 19 பேர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியினை அண்மித்த காட்டுப்பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சென்ற விமானம் ஒன்று திடீர் என தரையில் விழுந்து நொறுங்கியது.

குறித்த விமானத்தில் 17 பயணிகள் மற்றும் 2 விமானிகள் உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உடல்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்த மலைப் பகுதி 8,038 அடி உயரம் கொண்ட பனிப்பிரதேசமாகும்.

இதேவேளை, குறித்த பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் நால்வர் உயிரிந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.