Aug 06

கனடா – மானிரோபாவைத் தாக்கிய சூறாவளி: ஒருவர் உயிரிழப்பு

கனடாவின், மானிரோபாவைத் தாக்கிய சூறாவளி காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மனிரோபா – அலொன்சா பகுதியை கடந்த வெள்ளிக்கிழமை இரவு சூறாவளி ஒன்று தாக்கியதில் 77-வயதுடைய மனிதர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சூறாவளி காரணமாக வீடுகள் பல சேதமடைந்துள்ளதுடன், பல பெறுமதியான வாகனங்களும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. மேலும் குறித்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சூறாவளி 45-நிமிடங்கள் தரையில் நிலைத்திருந்ததாக கனடிய சுற்றுச் சூழல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த சூறாவளி நேற்று அதிகாலை தென்கிழக்கு மானிரோபா நோக்கி நகர்ந்ததால் படிப்படியாக சூறாவளி பலவீனமடைந்ததாக கனடிய வானிலை அவதானிப்பு நிலையம் குறிப்பிட்டிருந்தது.