Aug 04

ஜாகுவார் லேண்ட் ரோவர் வருகையால் பெரும் லாப எதிர்பார்ப்பில் டாடா மோட்டார்ஸ்!

பிரிட்டிஷ் மாடலான ஜாகுவார் லேண்ட் ரோவர் மீண்டும் வருகை புரிவதால், பெரும் லாப எதிர்பார்ப்பில் டாடா மோட்டார்ஸ் இருக்கிறது. 

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.1,864 கோடி நிகர நஷ்டத்தை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது. இந்த இழப்பிலும் உள்நாட்டு விற்பனையில் ரூ.1880 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த பல ஆண்டுகளாக ஜாகுவார் விற்பனையால் பெரும் லாபம் கிடைத்தது. 

இருப்பினும் உள்நாட்டு விற்பனையில் அத்தகைய லாபம் ஈட்ட முடியவில்லை. எனவே வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விற்பனையில் லாபம் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நாங்கள் எங்களின் பாதையில் சரியாகச் சென்று கொண்டிருக்கிறோம். எங்கள் இலக்கை நடப்பாண்டிலேயே அடைவோம் என்று கூறப்பட்டுள்ளது. உள்நாட்டைப் பொறுத்தவரை பயணிகள் மற்றும் வர்த்தக ரீதியிலான வாகன விற்பனையால் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.