Aug 04

இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு பிரித்தானிய நீதிமன்றில் அங்கீகாரம்

இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டமானது பிரித்தானிய நீதிமன்றத்தில் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து வழக்கொன்றின் போதே பிரித்தானிய உயர் நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

ஷரியா இஸ்லாமிய சட்டம் பிரித்தானிய திருமண சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற நிலையிலேயே நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய நம்பிக்கை திருமணம் அல்லது நிக்காஹ்வானது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத போதிலும் பிரித்தானிய சட்டத்தின் கீழ் அத்திருமணம் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின்படி ஷரியா சட்டத்தின் கீழ் திருமணம் செய்துக் கொண்டவர்களுக்கு தங்களது கணவர்களை விவாகரத்து செய்யவும், சொத்துக்களை பிரித்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.