Jun 03

சென்னை மாவட்ட ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து 24-ந் தேதி தொடக்கம்

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. இதில் ஆண்களுக்கான லீக் கைப்பந்து போட்டி வருகிற 24-ந் தேதியும், பெண்களுக்கான லீக் கைப்பந்து போட்டி 26-ந் தேதியும் தொடங்குகிறது. 

இரு பிரிவிலும் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், ஏ.கே.சித்திரைபாண்டியன், செயலாளர், சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர்-8 என்ற முகவரியில் வருகிற 10-ந் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தெரிவித்துள்ளார்.