Aug 04

இந்தியாவில் கார்மின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

கார்மின் நிறுவனத்தின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மியூசிக் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் அதிகபட்சம் 500 பாடல்களை பிரபல மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும். 

விவோஆக்டிவ் 3 அறிமுகம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட ஃபிட்னஸ் அம்சம், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் உள்ளிட்டவை புதிய சாதனத்திலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் மோடில் ஏழு நாட்கள் பேக்கப் வழங்குவதோடு, ஜிபிஎஸ் மற்றும் மியூசிக் மோடில் 5 மணி நேர பேக்கப், மியூசிக் இல்லாமல் ஜிபிஎஸ் மோடில் 13 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இந்தியாவில் விவோஆக்டிவ் 3 மியூசிக் விலை ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோஆக்டிவ் 3 மியூசிக் பிளாக் சிலிகான் 20மில்லிமீட்டர் பேண்ட் உடன் வருகிறது. கார்மின்ஸ்டோர், பேடிஎம் மால், அமேசான், ப்ளிப்கார்ட், ஹீலியோஸ் வாட்ச் ஸ்டோர் மற்றும் பல்வேறு விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது.