Aug 04

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட வலைகள் தீயிட்டு எரிப்பு

வவுனியா மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட தங்கூசி வலைகள் இன்று நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினரால் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


அவ்வாறு கைப்பற்றப்பட்ட வலைகளே வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.


மாமடு, வவுனியாகுளம் , பாவற்குளம் , மடுக்கந்தை போன்ற பிரதேசங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளே அழிக்கப்பட்டுள்ளன.


இதேவேளை கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 15 நபர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.