Aug 04

உயிர் தப்பிய தந்தை - மகன்... பங்கரமான திக் திக் நிமிடங்கள்!

உலகின் பல்வேறு இடங்களில் சாதாரண படிகட்டுகளுக்கு மாறாக எஸ்குலேட்டர் எனப்படும் எலக்ட்ரானிக் படிகட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் சில விபத்துகளும் அவ்வபோது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சீனா நாடு, சுவான்செங் பகுதியில் இருந்த ஒரு மாலில், திடீரென்று எஸ்குலேட்டர் செயலிழந்து உடையும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

எஸ்குலேட்டரின் செயல் பாதையில் சாவி சிக்கிக் கொண்டதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


விபத்து நடைபெறுவதற்கு சில நொடிகளுக்கு முன்னரே ஒரு சிறுவனும், அவனது தந்தையும் எஸ்குலேட்டரில் பயணம் செய்துள்ளனர். எஸ்குலேட்டரில் இருந்து அவர்கள் வெளிவந்த மறுகணம், படிகட்டுகள் விபத்துகுள்ளாகி உள்ளன.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய மால் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், எஸ்குலேட்டரின் செயல் பாதையில் சாவி சிக்கிக் கொண்டதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.