Mar 14

வவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் மீட்பு

வவுனியா உலுக்குளம் பகுதியிலுள்ள வெற்றுக் காணியிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் ஒன்று கண்டெடுக்கப்பட்டு விஷேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டள்ளது.
 
நேற்று காலை பிரதேசவாசி ஒருவர் தனது காணியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த மர்மப் பொருணை அவதானித்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக உலுக்குளம் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
 
இதையடுத்து அங்கு சென்ற பொலிசார், குறித்த மர்மப் பொருள், 60 மில்லி மீற்றர் வகையான ஷெல் என அடையாளம் காண்டுள்ளதோடு, விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கி, நீதிமன்ற அனுமதியுடன் செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.