Aug 04

மசாஜ் நிலையம் சென்றபோது வெளிநாட்டுப் பெண் சந்தித்த அதிர்ச்சி!

இலங்கையின் தென்மாகாணம் காலியில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த பெண் இந்துருவ யாலேகம பகுதியிலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் மசாஜ் செய்வதற்காகச் சென்ற நிலையிலேயே இந்த குற்றம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த மசாஜ் நிலையத்தின் இரண்டு முகாமையாளர்களை கொழும்பு சுற்றுலாப் பிரிவு பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கடை மற்றும் பெந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர்களே இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியைச் சேர்ந்த 21 வயதான அந்த யுவதி, குறித்த மசாஜ் நிலையத்திற்கு மசாஜ் செய்வதற்காக அங்கு சென்றதாகவும், அப்போது மசாஜ் செய்துகொள்ளும் போர்வையில் தான் அங்கு துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதுதொடர்பில் குறித்த மசாஜ் நிலைய முகாமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அவர்களைக் கைதுசெய்ததுடன் அந்த மசாஜ் நிலையத்தை தற்காலிகமாக இழுத்து மூடியுள்ளனர்.