Aug 04

யாழ்ப்பாண மக்களைக் காப்பாற்றுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அமானுஷ்ய சம்பவங்களால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.


இதனால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக காப்பாற்றுவதற்கு சிவில் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கோரியுள்ளார்.

யாழ்ப்பாண அரசாங்க முகவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

வாள்கள் மற்றும் கத்திகளை எடுத்து வந்து மக்களை அச்சப்படுத்தும் பல்வேறு குழுக்களின் செயற்பாடு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய அவர், மக்கள் சுதந்திரமான வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் துரதிஷ்டவசமாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை விரைவில் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு பிரதானியிடம் அவர் கேட்டுகொண்டார்.

இதன்படி சிவில் பாதுகாப்பு குழு, யாழ்ப்பாணத்தின் ஏனைய பாதுகாப்பு பிரிவுகளுக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் இவ்விடத்தில் கேட்டுள்ளார்.