Aug 04

ஐரோப்பாவில் பரவி வரும் புதிய வெப்ப அலையால் ஐபீரிய பிராந்தியத்தின் சில இடங்களில் வெப்பநிலை 50 பாகையை தாண்டும்

ஐரோப்பாவில் பரவி வரும் புதிய வெப்ப அலையால் ஐபீரிய பிராந்தியத்தின் சில இடங்களில் வெப்பநிலை 50 பாகையை தாண்டும் அபாய நிலை உள்ளதாக காலநிலை அவதான நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது நிலவும் வெப்பஅலை நிச்சயமாக 1977 யூலையில் ஏதென்சில் பதிவாகிய 48 பாகை அளவை எதிர்வரும் நாட்களில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்தான் 50 பாகை குறித்த இந்த எச்சரிக்கை வந்துள்ளது

இன்று ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் ஏற்கனவே வெப்பம் 47 பாகையை தாண்டியுள்ளது. கடும்வெப்பம் காரணமாக ஸபெயினில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால் அங்குள்ள அதிக பிராந்தியங்களில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.