Aug 04

காங். செயற்குழு கூட்டம் டில்லியில் இன்று கூடுகிறது

கட்சியின் அதிகாரம் மிக்க உயர் அமைப்பான காரியக் கமிட்டி, இன்று கூடுகிறது. காங்கிரசில், பல்வேறு நிலைகளில், அமைப்புகளும், பொறுப்புகளும் இருந்தாலும், கட்சியின் உயர் மட்ட அதிகாரம் மிக்க அமைப்பாக,செயற்குழு உள்ளது.

எந்தவொரு முக்கிய முடிவுகளையும், இறுதி செய்வது, செயற்குழுமட்டுமே. தலைவர் பொறுப்புக்கு, ராகுல் வந்த பின், கடந்த மாதம், 17ல், இக்குழு, புதிதாக மாற்றி அமைக்கப்பட்டது.

பின், ஜூலை, 22ல், ராகுல் தலைமையில் முதன்முறையாக கூடி, செயற்குழு ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், இக்குழு, இன்று மீண்டும் கூடவுள்ளது.தற்போது நடந்து கொண்டிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்தவாரம் முடிவடைகிறது. இக்கூட்டத்தொடரில், நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பரபரப்பு, சில நாட்களிலேயேமுடிந்துவிட்டது.

அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில், அரசியல் ரீதியாக, பா.ஜ.,வுக்கு நெருக்கடி ஏற்படுத்த கிடைத்துள்ள அருமையான வாய்ப்பாக, இதை, காங்கிரஸ் மூத்த தலைவர்கள்கருதுகின்றனர்.