Aug 03

500 கிலோ கிராம் மதிக்கதக்க 5 தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில்  தங்க பிஸ்கட்களை  இலங்கைக்கு கடத்திவர முயன்ற இலங்கை பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபர் இன்று அதிகாலை சிங்கப்பூலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து  வெளியேறும் போது குறித்த நபரின் பயண  பொதியில் மறைந்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தங்க பிஸ்கட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்  கம்ஹா பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய வியாபாரியே என  சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சேதனையிட்டபோது   சுமார் 3.2 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவரிடமிருந்து சுமார்  (3,250,000 )  மூன்று கோடியே 250 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்ட்களை  மீட்டுள்ளனர். 

சுமார் 500 கிலோ கிராம் மதிக்கதக்க 5 தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விமான நிலைய சுத்திகரிப்பு சேவை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.