Jun 03

குறுகிய காலத்தில் திறமையான நடிகை என பெயர் வாங்கி இருக்கிறேன்: ஸ்ருதிஹாசன்

குறுகிய காலத்தில் திறமையான நடிகை என பெயர் வாங்கி இருக்கிறேன் என நடிகை ஸ்ருதிஹாசன் கூறினார்.

இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:

சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். எனது தந்தை உனக்கு எதுபிடிக்கிறதோ அதை சுதந்திரமாக செய் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோல் சுதந்திரமாக இருக்கிறேன். அதற்காக கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவது இல்லை. சுதந்திரத்தை நல்லபடியாகவே பயன்படுத்துகிறேன். ஹிந்திபடம் மூலம் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதும் நான் எடுத்தமுடிவுதான். அதனால்தான் லக்படத்தில் அறிமுகமானேன்.

அதன்பின்னர் தெலுங்கு, தமிழுக்கு வந்தேன்.தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டுஇருக்கிறேன். சினிமாவில் எனது முழு திறமையும் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. எல்லா மொழி படங்களிலும் பெயர் வாங்க வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. அதை ஓரளவு நிறைவேற்றிஇருக்கிறேன்.

குறைந்த காலத்தில் திறமையான முன்னணி நடிகையாக என்னை நிலைநிறுத்திஇருக்கிறேன். கமல்ஹாசன் மகள் என்பது சினிமாவில் எனது அறிமுகத்துக்குமட்டும் பயன்பட்டது. கடைசிவரை கமல் மகள் என்ற அந்தஸ்து உதவாது என்றும் முதல் வாய்ப்பு வேண்டுமானால் எளிதாக கிடைக்கலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்றும் எனது தந்தை கூறி இருக்கிறார். அதை மனதில் வைத்து செயல்படுகிறேன என்றார் அவர்.