Aug 03

கனடா ஆற்றில் சடலமொன்று கண்டெடுப்பு!

கனடாவில் சஸ்கெடசவன் மாகாணத்தின் தெற்குப் பகுதியிலுள்ள ஆறொன்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4 மணித்தியாலங்களாக  ரொபர்ட் ஹரி லெஹ்டோ (வயது-57) என்பவரைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த ஆறில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.

எனினும், குறித்த சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.