Aug 03

கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க நாளை மறுநாள் ஜனாதிபதி சென்னை வருகை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலை தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக சினிமா பிரபலங்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலரும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அறிவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 5-ம் தேதி)  சென்னை வருகிறார்என தகவல்கள் வெளியாகியுள்ளன.