Aug 03

தினேஷ் குணவர்தனவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியா?

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் நிலைப்பாட்டை அறிய தருமாறு கோரி, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (02) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், கூட்டு எதிர்க்கட்சியில் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதால், பாராளுமன்ற குழு தலைவரான தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஜூலை 30 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் ஒன்றை கையளித்தனர்.