Aug 03

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத் தீ: மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தில் காட்டுத்தீ மிக வேகமாக பரவிவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) காட்டுத்தீ  சடுதியாகக் பரவத் தொடங்கியதையடுத்து அப்பதியிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட குறித்த காட்டுத் தீயின் காணொளிக்கிணங்க, 80இற்கும் அதிகமான கிராமப் பகுதிகள் இக்காட்டுத் தீயினால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

ஒரேகன் மாநிலத்தின் தென்பகுதியிலுள்ள கலிபோர்னியாவைத், தொடா்ந்து தாக்கிவரும் காட்டுத்தீயானது 11 நாளாக சுடர்விட்டு எரிந்து வருகின்றது. அதில் 6 பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கணக்கான வீடுகளும் கட்டடங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன. அவ்வாறான நிலையில், தற்போது ஒரேகன் மாநிலத்திலும் காட்டுத்தீ பரவியுள்ளது.

அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயிலுடன் காற்றும் பலமாக வீசுவதால் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்கள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.