Aug 03

பிரான்சில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை!

பிரான்சில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட இணைய வசதியுடன் கூடிய சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகவுள்ளனர்.

இதன் காரணமாக பிரான்சில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடைவிதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் ஏற்கனவே ஆசிரியர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது மாணவர்களுக்கும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தற்போது பிரான்சில் பேசு பொருளாக மாறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.