Aug 03

பிரிட்டனில் ஓன்று கூடிய ஈழத்தமிழர்கள்

விளையாட்டால் ஓன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் ஈழத்தமிழர்கள் பிரிட்டனின் லண்டன் நகரில் ஓன்று கூடி பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றினர். தியாக தீபம் திலீபன் நினைவாக நாடு கடந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பிரிட்டனின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பலரும் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன், ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.