Aug 02

விரைவில் சந்தோஷ செய்தி: பிரியாமணி டுவீட்!

விரைவில் சந்தோஷ செய்தி ஒன்றை நானும் எனது கணவரும் அறிவிக்க இருக்கிறோம்'' என்று நடிகை பிரியாமணி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

''கண்களால் கைது செய்'' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் பிரியாமணி. பின்னர் ''பருத்தி வீரன்'' படத்தில் நடிகர் கார்த்திக்குடன் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்த இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். 

இவர் தனது காதலர் முஸ்துபா ராஜை திருமணம் செய்து கொண்டார். பின்னர், தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். இந்த நிலையில் இவர் தனது டுவிட்டர் பதிவில், ''உங்கள் அனைவருக்கும் விரைவில் என்னிடம் இருந்தும், எனது கணவரிடம் இருந்தும் ஒரு சந்தோஷ செய்தி வரவுள்ளது. காத்திருங்கள்!! என்று தெரிவித்துள்ளார். இந்த டுவிட் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

கர்ப்பம் தரித்தது இருப்பாரா? அல்லது வேறு எதாவது மகிழ்ச்சியான செய்தியாக இருக்குமா? என்று அவரது ரசிகர்கள் குழம்பி உள்ளனர். கடந்த 2017, ஆகஸ்ட் 23ஆம் தேதி, முஸ்துபாவை பிரியாமணி திருமணம் செய்து கொண்டார். அவர் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே, அவர் கருதரித்து இருப்பார் என்று கருதிய அவரது ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.