Aug 02

குறைந்த விலையில் ஐந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த மொபிஸ்டார்

வியட்நாமை சேர்ந்த மொபிஸ்டார் ஸ்மார்ட்போன் நிறுவனம் XQ டூயல் மற்றும் CQ செல்ஃபி ஸ்மார்ட்போன்களின் மூலம் மே மாதத்தில் இந்தியாவில் கால்பதித்தது.

தற்சமயம் மொபிஸ்டார் நிறுவனம் ஐந்து புதிய ஸ்மார்ட்போன்களை ஆஃப்லைன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் எஸ்.ஓ.சி. விவரங்கள் மற்றும் ஆன்ட்ராய்டு வெர்ஷன் சார்ந்த விவரங்களை வழங்கவில்லை. 

புதிய ஸ்மார்ட்போன்கள் மொபிஸ்டார் சி1 லைட், சி1, சி2, இ1 செல்ஃபி மற்றும் எக்ஸ்1 டூயல் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் மொபிஸ்டார் சி1 லைட், சி1, சி2, இ1 செல்ஃபி மற்றும் எக்ஸ்1 டூயல் ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.4,340, ரூ.5,400, ரூ.6,300, ரூ.8,400 மற்றும் ரூ.10,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள் நாடு முழுக்க சுமார் 600 விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இத்துடன் இந்தியா முழுக்க சுமார் 1000 சர்வீஸ் சென்ட்டர்களின் மூலம் சிறப்பான அனுபவத்தை நுகர்வோருக்கு வழங்க இருக்கிறது.