Aug 02

ஆஸ்திரேலிய சமையல் மாஸ்டர் போட்டியில் வென்ற இந்தியர்

ஆஸ்திரேலிய சமையல் கலைஞர்களுக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் சசி செல்லையா. மதுரையை பூர்விகமாக கொண்ட அவர், சிங்கப்பூரில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். போலீசில் பல பதவிகளை வகித்துள்ள அவர், மகளிர் சிறையில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த சமையல் கலைஞர்களுக்கான ஆஸ்திரேலியா மாஸ்டர்செப் 2018 ல் போட்டியில் கலந்து கொண்ட சசி செல்லையா , இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார்.

சுமார் 90 நிமிடங்கள் நடந்த இறுதிப்போட்டியில் , சசி செல்லையா, மிளகாய் சார்ந்த பொருட்களை வைத்து உணவு தயாரித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த பென் பேர்ஸ்ச்ட், பட்டாணி சார்ந்த பொருட்களை வைத்து உணவு தயாரித்தார். இதில் சசி செல்லையா தயாரித்த உணவில் கவர்ந்த நீதிபதிகள், அவருக்கு 93 மதிப்பெண்கள் வழங்கி வெற்றி பெற செய்தனர்.

வெற்றி பெற்ற சசி செல்லையா கூறுகையில், இறுதி போட்டிக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. இந்திய மற்றும் தெற்காசிய உணவுகள் தயாரித்து வழங்க ஓட்டல் திறப்பதே எனது லட்சியம் எனக்கூறினார். சசி செல்லையாவை, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், இணையதள வாசிகள் பாராட்டி வருகின்றனர். வெற்றி மூலம் இந்தியாவை பெருமையடைய வைத்துள்ளதாக கூறினர்.