Aug 02

காலியில் புதிதாக இரண்டு கிரிக்கெட் விளையாட்டு மைதானம்

காலியில் புதிதாக இரண்டு கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


காலி களு வெல்ல பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிசொகுசு ஹோட்டல் ஒன்றை திறந்துவைத்தபோதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

காலி கிரிக்கெட் மைதானம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், ஒரு விளையாட்டு மைதானம் காலி களுவெல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அடுத்த விளையாட்டு மைதானம் கொக்கல பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.