Aug 02

தன் குழந்தையை பிளிச்சீங் போட்டு நீராட்டிய தாய்: அதிர்ச்சிக்குள்ளாக்கும் காரணம்

அமெரிக்காவில், 'ராவன் ஃபோர்டு' என்ற 23 வயதுடைய தாயொருவர், தனது குழந்தை பிறந்தபோது அது ஒரு பிளாஸ்டிக் பொம்மை போல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.



'அமீலியா மோ' என்னும் அந்தக் குழந்தைக்கு ஒரு அபூர்வ தோல் நோய் இருப்பதால் அவளது தோல் காய்ந்து காணப்பட்டது. அதனால் வைத்தியர்கள் இரண்டு நாளுக்கொருமுறை அவளை பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் 'மோ'வின் தோல் உதிர்வதால் அவளுக்கு எப்போதும் மாய்ச்சரைஷர் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

பிளீச்சிங் போடாவிட்டால் 'மோ'வுக்கு நோய்த்தொற்று வேறு ஏற்பட்டு விடும் என்பதால் அவளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் அவளது தாய்.



இதுபோக 'மோ'வுக்கு இன்னொரு பிரச்சினை, அவளுக்கு வியர்வை துளைகள் இல்லாததால் அவளை எப்போதும் குளிர்ச்சியாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போது ஒரு வயதாகும்'மோ'வின் நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டாலும் அவளை வெளியே கொண்டு செல்லும்போது பலர் அவளை குழந்தை என்று கூட பார்க்காமல் கிண்டல் செய்வதுதான் தனக்கு கவலையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.