Aug 02

ஸ்பெயினில் கடும் வெப்பம்: மக்கள் அவதி

ஐரோப்பிய நாடுகளில் தற்போது வெப்பநிலை அதிகரித்துச் செல்கின்ற நிலையில், ஸ்பெயினிலும் தற்போது கடும் வெப்பநிலை காணப்படுகிறது.

குறிப்பாக ஸ்பெயினின் தெற்கு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) வெப்பநிலை 35 பாகை செல்சியஸை தாண்டுமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

காலநிலையை சமாளிக்க மக்கள் பாரம்பரிய கை விசிறிகளுடன் வீதிகளில் நடமாடுகின்றனர். அத்தோடு, நிழலை நாடிச்செல்வதோடு, அதிகளவான நீரை அருந்தி வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

ஸ்பெயினின் சில பகுதிகளிலேயே இன்று வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதென காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, போர்த்துக்கலில் இன்று அதிகரித்த வெப்பநிலையாக 45 பாகை செல்சியஸ் காணப்படலாமென அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.