Aug 02

வியட்நாமில் தங்கப்பாலம் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது

வியட்நாமில் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ள தங்கப்பாலம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டனாங் (Danang) அருகே உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பானா (Bana) மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் 150 மீட்டர் நீளத்தைக் கொண்டதாகும்.

காங்க்ரீட் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு பிரம்மாண்ட கரங்கள் இந்தப் பாலத்தை தாங்குவதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள தோற்றம், காண்போரை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.

இந்த பாலத்தை பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்து செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.கடவுளின் கரங்களில் பத்திரமாக இருப்பதைப் போன்ற உணர்வு இந்த தங்க நிற பாலத்தைக் கடக்கும் போது ஏற்படுவதாக சுற்றுலாப்பயணிகள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.