Aug 02

பிரதமர் ரணில் இன்று திருப்பதி பயணம் வரும் வழியில் கலைஞரைப் பார்ப்பார்

ஸ்ரீரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருப்பதி திருமலையானைத் தரிசிப்பதற்காக இன்று வியாழக்கிழமை இந்தியா பயணமாகின்றார்.



ஆலயத் தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் சென்னையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியையும் நேரில் சென்று பார்த்து சுகம் விசாரிப்பதற்கு அவர் திட்டமிட்டிருக்கின்றார் எனத் தெரியவந்தது