Aug 02

சுவீடனில் அரச கிரீடங்கள் திருட்டு!

சுவீடனில் அரச கிரீடங்களுட்பட விலைமதிப்பற்ற தொல்பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களவாடப்பட்ட அரச கிரீடங்கள், நகைகள் உள்ளடங்கிய  பாரம்பரியமாக பாதுகாத்துவரும் பொருட்களினுடைய புகைப்படமொன்று (புதன்கிழமை) அந்நாட்டுப் பொலீஸார் வெளியிட்டுள்ளனர்.

தென்கிழக்கு சுவீடனின் ஸ்ரெங்னாஸ் பகுதியிலுள்ள கிருஸ்தவ தேவாலயமொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரச கிரீடங்களும் கோள வடிவ தங்க பொருட்களும் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு திருடப்பட்டுள்ளன.

குறித்த விலைமதிப்பற்ற பொருட்களை திருடிய கள்வர்கள் மோட்டார் படகொன்றில் தப்பித்து ஓடியதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு கிரீடங்கள், 1604இல் ஆட்சி புரிந்த 9ஆம் கார்ல் மன்னனுடையதும், கிரிஸ்டீனா அரசியினதுமாகும்.