Aug 02

இலங்கையில் போதைப்பொருள் அதிகளவில் எங்கு தெரியுமா விற்பனையாகின்றது?

இலங்கையில் போதைப்பொருள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் இடங்கள் தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.


அதன்படி இலங்கையில் கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வயைரான பிரதேசங்களிலேயே போதைப் பொருள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

அத்துடன் இரண்டாவது இடத்தில் கம்பஹா மாவட்டமும் மூன்றாவது இடத்தில் குருணாகல் மாவட்டமும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்கள் வருடாந்தம் ஆயிரம் கிலோ கிராம் போதைப் பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் கடத்தலை தடுக்க எடுக்க முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். புதிதாக நாட்டுக்குள் வரும் போதைப் பொருள் குறித்து பொலிஸாருக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

இதேவேளை சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.