Mar 14

கோவாவின் முதலமைச்சராக மனோகர் பாரிக்கர்

கோவாவின் முதலமைச்சராக இன்று மாலை தலைநகர் பனாஜியில் மனோகர் பாரிக்கர் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப் பிரமாணம் மற்றும் இரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். 

அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்த சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருவர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோவா முன்னாள் முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவாவில் 13 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றமை குறிப்பித்தக்கது.