Aug 02

வாட்ஸ்ஆப்பில் நால்வருடன் வீடியோ அழைப்புக்கு வசதி

ஒரே நேரத்தில் நான்கு பேருடன் வீடியோ மற்றும் ஓடியோ அழைப்பில் ஈடுபடும் வசதியை பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது.

உலகளவில் குறுஞ்செய்தி செயலிகளில் முதன்மையான இடத்தை பெற்ற வாட்ஸ்ஆப்பை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.

கடந்த மே மாதம் நடந்த பேஸ்புக் நிறுவனத்தின் எப்8 மாநாட்டில் குரூப் வீடியோ மற்றும் ஓடியோ அழைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி, உலகம் முழுவதுமுள்ள ஆண்ட்ரொய்., ஐ.ஓ.எஸ் இயங்குதள வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ மற்றும் ஓடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது.