Jun 02

டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு ஏமாற்றமளிக்கின்றது: தெரேசா மே

காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதான ட்ரம்பின் அறிவிப்பு ஏமாற்றமளித்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

சூழல் வெப்பமடைவதன் காரணமாக உலகிற்கு தீங்கு ஏற்படும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பரிஸில் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்ற உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்திருந்தார்.

பரிஸ் உடன்படிக்கையில் அமெரிக்க நிலைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்த சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்பின் அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட தெரேசா மே தமது ஏமாற்றம் குறித்து வெளிப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

மேலும், பரிஸ் உடன்படிக்கையில் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.