Aug 01

மன்னார் மனித எலும்புக்கூடுகள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா???

மன்னார் சதோச மனிதப் புதைகுழியில் இதுவரை 62 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.


குறித்த மனித எலும்புக்கூடுகள் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னார் நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 44 ஆவது நாளாகவும் மனித எச்சங்களை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் இடம்பெறும் இந்த அகழ்வுப் பணிகளுக்கு மன்னார் மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச தலைமை தாங்குகின்றார்.

அவருக்கு உதவியாக மேலும் சில சட்ட வைத்திய அதிகாரிகளும், தொல்பொருளியல் நிபுணரான களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவ மற்றும் அவரது குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய மன்னார் சதோச மனிதப் குதைகுழியில் 62 முழுமையான மனித எலும்பக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மன்னார் மாவட்ட விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ச, இவற்றில் 52 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஏராளமான மனித எச்சங்களும் மீட்கப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய சடட வைத்திய நிபுணர், குறித்த மனிதப் புதைகுழியின் காலப்பகுதி குறித்து அறிந்துகொள்ள காபன் விசாரணைகளை நடத்தவும்

தீர்மானித்துள்ளதாகவம் தெரிவித்தார்.

இதற்காக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்க நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்திருப்பதாகவும் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போது மருத்துவர் சமிந்த

ராஜபக்ச தெரிவித்தார்.

எனினும் அமெரிக்காவின் புளோரிடா ஆய்வு கூடத்திற்கு மனித எச்சங்களை காபன் பரிசோதனைக்கு அனுப்புவதை காணாமல் போனோரின் உறவினர்களும், அவர்கள் சார்பில்

முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.