Aug 01

இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் தடை; மீறினால் அவ்வளவுதான்!

க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் தடையொன்று கொண்டு வரப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி இந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் என்பவற்றை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2018ஆம் ஆண்டிற்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இந்த அறிவிப்பு மீறப்படுமாயின் குறித்த தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.