Aug 01

சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நவாஸ் ஷெரிஃப்

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நவாஸ் ஷெரிஃப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பனாமா ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு நெஞ்சு வலியும், சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டது. 

அதனால் இஸ்லாம்பாத்தில் உள்ள பாகிஸ்தான் அறிவியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பிறகு, மீண்டும் நவாஸ் ஷெரிஃப் மீண்டும் சிறை செல்லலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். 

அதை தொடர்ந்து 11 பாதுகாப்பு வாகனங்கள் சூழ பலத்த பாதுகாப்பு வாகனங்களுடன் நவாஸ் ஷெரிஃப் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டார். 

எனினும் தொடர்ந்து அல்ட்ராசவுன்ட் மற்றும் இதயம் தொடர்பான சில பரிசோதனைகளை மேற்கொள்ள நவாஸ் ஷெரிஃப்பிற்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.