Aug 01

கிங் பெங்குவின் எண்ணிக்கை 30 ஆண்டில் வேகமாக வீழ்ச்சி

பெங்குவின் பறவை இனத்தில் கிங் ரகப் பெங்குவின்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

முப்பதே ஆண்டில், அவற்றின் எண்ணிக்கை 90 வீதம் குறைந்துள்ளதாக அவர்கள் கூறினர். பிரான்ஸின் இலே ஒக்ஸ் கோசோன்ஸ் தீவில் இதற்கு முன் 1 மீற்றர் உயரமுள்ள 2 மில்லியன் கிங் பெங்குவின்களை ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.

ஆனால், அண்மையில் செயற்கைக்கோள் வாயிலாக எடுக்கப்பட்ட படங்களில் சுமார் 200,000 கிங் பெங்குவின்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

கிங் பெங்குவின்களின் எண்ணிக்கை அந்தளவுக்குக் குறைந்ததன் காரணம் ஆய்வாளர்களிடையே மர்மமாக உள்ளது. பருவநிலை மாற்றமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.

ஒரே இடத்தில் அதிக பெங்குவின்கள் குவிந்து கிடப்பதும் மற்றொரு காரணமாகக் கருதப்படுகிறது.

கிங் பெங்குவின்கள் வேறிடத்திற்குச் சென்றிருக்கவும் முடியாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், அருகில் கிங் பெங்குவின்களுக்குத் தகுந்த தீவு வேறேதுமில்லை என்று ஆய்வாளர்கள் விவரித்தனர்.