Aug 01

இரண்டாவது ஒருநாள் ஆட்டம் இன்று தம்புள்ளையில்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக (2.30) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும்.

மெத்தியூஸின் தலைமையில் இன்று களமிறங்கும் இலங்கை அணியில், அகில தனஞ்சய, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, செஹன் ஜயசூரிய, பிரபாத் ஜயசூரிய, லஹிரு குமார,

சுரங்க லக்மால், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, திஸர பெரேரா, கசூன் ராஜித, லக்ஷான் சந்தகன், சானக மற்றும் உபுல் தரங்க ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

டூ பிளஸ்ஸி தலைமையில் களமிறங்கும் தென்னாபிரிக்க அணி சார்பாக, ஹஸிம் அம்லா, ஜூனியர் தலா, டீகொக், ஜே.பி.டூமினி, ஹேண்டிரிக்ஸ், கிளேஸின், மஹாராஜ், மர்க்ரம், டேவிட் மில்லர், முல்டர், லுங்கி நிங்கிடி, ரபடா மற்றும் சம்ஸி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.