Jul 30

அவுஸ்திரேலிய மெக்குரி குழுமத்தின் CEOவான முதலாவது இலங்கை பெண்

அவுஸ்திரேலியாவில் உள்ள மெக்குரி குழுமத்தின் (Macquarie Group Ltd) பிரதான நிறைவேற்று அதிகாரியாக இலங்கையைச் சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 

அந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய நிகலஸ் மூவர் (Nicholas Moore) ஓய்வு பெற்றதை அடுத்தே ஷெமாரா விக்ரமநாயக்க, அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மெக்குரி குழுமத்தில் பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய மூவர் நவம்பர் 30 ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளார். 

இந்நிலையில் 56 வயதான ஷெமாரா விக்ரமநாயக்க 1987ஆம் ஆண்டு முதல் மெக்குரி குழுமத்தில் பணியாற்றி வருகிறார். 

மேலும், மெக்குரி குழுமத்தின் முதலாவது பெண் பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற பெருமையையும் ஷெமாரா விக்ரமநாயக்க பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.