15 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்கு அருகே வரும் செவ்வாய்! - இன்று நாளையும் தெளிவாக காணலாம்
செவ்வாய் கிரகத்தை இன்றும் நாளையும் மிகத் தெளிவாக காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழக கோள் மண்டல கற்கைக் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
15 வருடங்களுக்கு பின்னர் செவ்வாய்க் கிரகம் தனது அண்டவெளி சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்துள்ளது. இது சற்று அபூர்வமான விடயம் என்றும் சந்தரன ஜயரட்ன கூறினார்.
இந்த நாட்களில் சூரியன் அஸ்தமனமாகும் வேளையில் கிழக்கு வானில் செவ்வாய் கிரகணத்தை காண முடியும். அதிகாலை வேளையில் மேற்கு வானில் இந்த கிரகத்தை காண முடியும். இன்றும் நாளையும் செவ்வாய் கிரகத்தை மிகத் தெளிவாக காண முடியும் என்று கலாநிதி சந்தன ஜயரட்ன மேலும் தெரிவித்தார்.