Jul 30

நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் நெஞ்சுவலி: சிறையில் இருந்து மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் சிறையில் இருந்து இஸ்லாமாபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அவருக்கு உயர் வகுப்பு கைதிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் சொகுசான அடுக்குமாடி வீடுகளை வாங்கிய வழக்கில் நீதிமன்ற உத்தரவு படி கைது செய்யப்பட்டு  நவாஸ் ஷெரீப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்