Jul 30

ரொறன்ரோ மேயர் தேர்தலில் ஜெனிபர் கீஸ்மாட் போட்டி

ரொறன்ரோவின் முன்னாள் தலைமை திட்டமிட்டல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மாட், அடுத்து இடம்பெறவுள்ள மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

ரொறன்ரோவிற்கு தைரியமான தலைமை மற்றும் யோசனைகள் அவசியம் என சுட்டிக்காட்டிய அவர், அதனாலேயே இத்தேர்தலில் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் நேற்று முன்தினம்  (வெள்ளிக்கிழமை) தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மேலும், சரியான மற்றும் வளமான முடிவுகளை எடுப்பதன் மூலம் எமது நகரத்தை மேலும் உயிரோட்டமாக்க முடியும் எனவும் கூறினார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த தேர்தலில் 21 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.