Jun 02

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சாய் பிரனீத் கால்இறுதிக்கு முன்னேற்றம்

பாங்காங்கில் நடந்து வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில சாய்னா, சாய் பிரனீத் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினர்.தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-13, 21-18 என்ற நேர்செட்டில் இஸ்கந்தர் சுல்கர்னை (மலேசியா) வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா 16-21, 25-23, 11-21 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவெர்டெஸ்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-11, 21-14 என்ற நேர் செட்டில் யிங் யிங் லீயை (மலேசியா) துவம்சம் செய்து கால்இறுதிக்கு முன்னேறினார்.