Jul 28

கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்!

ருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரண்டுள்ளனர். இந்நிலையில் கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் ஏபிபி நியூஸை மேற்கோள் காட்டி அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தெரிவித்துள்ளார்.