Jul 28

கணவன் செய்த அதிர்ச்சி செயல்!

 உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் குஷிநகர் பகுதியில் மனைவி பக்கத்து வீட்டு இளைஞருடன் உறவில் இருப்பதை நேரில் கண்ட கணவன் கிராமத்தினரை கூட்டி அவர்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து துவைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கணவர் நந்தல் மும்பையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் வெளி ஊருக்கு செல்லும் நேரத்தில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஜிதேந்தர் என்பவர் அடிக்கடி நந்தல் வீட்டிற்கு வந்து சென்று அவரது மனைவியுடன் உறவில் ஏற்பட்டு வந்துள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெளியுரில் தங்கி வேலை பார்க்கும் கணவர் நந்தலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உன் மனைவி வேறு நபருடன் தொடர்பில் உள்ளார் எனக் கூற மனைவியிடம் சொல்லாமல் ஒரு நாள் வீட்டிற்கு வந்த கணவனர் மனைவி பக்கத்து வீட்டு காரனுடன் படுக்கையில் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து வீட்டிலேயே வைத்து இருவரையும் அடித்து துவைத்துள்ளார்.

சத்தம் கேட்டு கிராமமே ஒன்று கூடவே பின்னர் இருவரையும் மரத்தில் கயிற்றில் கட்டி ஊரே சேர்ந்து அடித்துள்ளனர்.

இதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.